டில்லி:

இந்திய தொழில் நுட்ப கழக (ஐ.ஐ.டி) முன்னாள் மாணவர்கள் 50 பேர் இணைந்து அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.

2015ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பிரிவை சேர்ந்த நவீன்குமார் கூறுகையில், ‘‘ அனைத்து ஐ.ஐ.டிக்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும்.

பகுஜன் ஆசாத் கட்சி என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை. 2020ம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தல், 2024-ல் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.