வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நியமனம்!

சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியின் பொறுப்பாள ராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவை காங்கிரஸ் கட்சியின் தலைமை நியமனம் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்ற உ.பி. அமேதி தொகுதியில்  4-வது முறையாக  போட்டி யிடுகிறார்.  அதேவேளையில், தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் 2வது தொகுதியாகவும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், இன்று  தனது சகோதரி பிரியங்காவுடன் வயநாடு வந்த ராகுல்காந்தி மாவட்ட கலெக்டர் அஜயகுமாரிடம் தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அங்கிருந்து வாகன பேரணி புறப்பட்டது. வேனில் நின்றபடி சென்ற ராகுல் காந்திக்கும் பிரியங்காவுக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றனர். அவர்களுக்கு மக்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலுவை காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: r KV Thangabalu, RahulGandhi, Wayanad constituency, Wayanad constituency Incharge
-=-