முன்னாள் தமிழக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

 

சென்னை:

மிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியன்  சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார்.

கடந்த சில நாட்களாக போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி அருகில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார்.  அப்போது சபாநாயகருக்குத்தான் வானளாவி அதிகாரம் உள்ளது என்று கூறி, சபாநாயகரின் அதிகாரத்தை உலக்கு அறிய வைத்தார்.