பாஜக.வுக்கு யஷ்வந்த் சின்ஹா முழுக்கு

டில்லி:

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும். முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார்.

பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டமன்ற தேர்தல்களில் சின்ஹா பாஜக.வையும், மோடியையும் எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா இன்று பாஜக.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.