டில்லி:

பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. சன்வர்லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு நாட்டிற்கும், பா.ஜ.,வுக்கும் பேரிழப்பு என பிரதமர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. சன்வர்லால் டில்லியில் காலமானார்.  உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62.

பாரதியஜனதாவை சேர்ந்த சன்வர்லால் ஜாட்,  ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர்.

2014 நவம்பர் முதல் 2016 ஜூலை வரை மத்திய நீர்வள துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.