2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டி ‘டை’ ஆன நிலையில், சூப்பர் ஓவரும் ‘டை’ ஆகிவிட, எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்தது என்ற கணக்கீட்டின் அடிப்படையில், அதிர்ஷ்டவசமாக கோப்பையை தட்டிச் சென்றது இங்கிலாந்து அணி.

ஆனால், ஐசிசி அமைப்பின் இந்த விதிமுறையை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்திய முன்னாள் பேட்ஸ்மேனும், இந்நாளைய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர், “இது ஒரு கேலிக்கூத்தான விதிமுறை. இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு வாழ்த்துக்கள்” என்றுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ கூறும்போது, “இந்த விதிமுறை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது நிச்சயம் மாற்றப்பட வேண்டும்” என்றார்.

முன்னாள் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ், “இது ஒரு காமெடி” என்றுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், “எனக்கு இந்த விதிமுறையில் உடன்பாடில்லை. ஆனாலும் விதிமுறை விதிமுறைதான். இது ஒரு சிறந்த இறுதிப்போட்டி” என்றுள்ளார்.

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிதான், முதன்முதலாக சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டியாகும்.