மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் பட் ரியூசவ் காலமானார்

ஜமைக்கா:

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பட் ரியூசவ் காலமானார்.


மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தவர் பட் ரியூசவ்.

வழக்கறிஞரான பட் ரியூசவ், கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த அவர், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகளின் வெற்றிக்கு முக்கிய உந்துதலாக இருந்தவர்.
மேற்கு இந்திய தீவுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

85 வயதான பட் ரியூசவ் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த நிர்வாகியான அவர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவுரவ உறுப்பினராகவும் பணியாற்றியிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.