லண்டன்:
லகின் முதல்தர கார் பந்தயமான ஃபார்முலா ஒன்  லிபர்ட்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனத்திடம்   எட்டு பில்லியன் டாலருக்கு (சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் கோடி )  விற்கப்படுகிறது. இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
85 வயதான பெர்னி எக்லஸ்டோன் என்பவர் 40 வருடங்களாக ஃபார்முலா ஒன் கார்பந்தயங்களை நடத்தும் ஏகபோக உரிமையாளாராக இருந்தார். அவரிடமிருந்து லிபர்ட்டி மீடியா அமெரிக்காவின் தொலைதொடர்பு நிறுவனம் எட்டு லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தப்போட்டியின் உரிமத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது.
goodwp-com_20525
ஆனால் அனுபவம் வாய்ந்த பெர்னி எக்லஸ்டோன் தலைமைச் செயல் அதிகாரியாக நீடிப்பார் என்றும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சேஸ் கெரிக்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேஸ் கேரி புகழ்பெற்ற ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான 20-த் சென்சுரி ஃபாக்ஸின் துணைத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கேரி குறிப்பிடும்போது, இப்புதிய பொறுப்பு தனக்கு உற்சாகத்தைத் தருவதாகவும், பெர்னி எக்லஸ்டோனுடன் இணைந்து பணியாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்திய ஃபார்முலா ஒன் போட்டிகள், அமெரிக்க மீடியா நிறுவனத்தின் கைக்கு வந்தது அமெரிக்கர்களிடையே ஃபார்முலா ஒன் பந்தையத்தை மேலும் பிரபலமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.