இன்று ராகு – கேது பெயர்ச்சி : அதிர்ஷ்டமும் பரிகாரங்களும்

ன்று (27.07.17) ராகு – கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.  வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள்.  இந்த இரு கிரகங்களும் பின்னாலிருந்து முன்னால் இடம் பெயரும் தன்மை உடையவை.

இந்த பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.  ஆனால் இவை யாவும் பொதுப் பலன்களே.  உங்களின் ஜன்ம ஜாதகத்தைக் கொண்டு சொல்லப்படும் பலன்களே உங்களுக்கு உரியவை.  எனவே நன்கு அறிந்த ஜோதிடரிடம் பலன்களைப் பெறுவதே உசிதம்.

நாம் தற்போது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நேரலாம் என்னும் பொதுப் பலனை பார்ப்போம்

மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்

மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.  நினைத்த காரியங்கள் எளிதில் கை கூடும்.  அனைவரிடமும் பாராட்டுக்கள் பெறுவார்கள்.  திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமணம் கைகூடும் நேரம் வந்துள்ளது.  இதுவரை குடும்பத்திலும், அலுவலகத்திலும் இருந்த பிரச்னைகள் தீர்ந்து இனிமேல் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.  அதை வாங்கித் தரும் பெருமை ராகு – கேது ஆகிய கிரகங்களுக்குச் சேரும்.

ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம்.

மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு பொதுப் பலன்படி இந்தப் பெயர்ச்சி அவ்வளவு நன்மையைத் தராது எனவே சொல்லலாம்.  எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்.  ’நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும், நாதன் நம்முடன் இருக்கையில்’ என்பது மூத்தோர் வாக்கு. அதனால் இறை வழிபாடு உங்களை எல்லா துயரிலிருந்தும் காக்கும்.  பரிகார தலங்களுக்கு சென்று உங்கள் ஜாதகத்துக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதின் மூலம் நன்மைகளைப் பெரலாம்.

இவ்வளவும் சொல்லிட்டீங்க,  பரிகாரம் எங்கே செய்வதுன்னு கேட்கறீங்களா? 

திருநாகேஸ்வரம், திருவாலங்காடு, திருச்செங்கோடு, திருப்பாம்புரம் ஆகிய ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்யலாம்.  இல்லை எனில் உங்கள் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள நவகிரக சன்னிதியில் உள்ள ராகு கேதுவுக்கும் பரிகாரப் பிரார்த்தனைகள் செய்யலாம்.

சென்னையில் உள்ள ராகு கேது ஸ்தலங்கள்

குன்றத்தூரில் உள்ள திரு நாகேஸ்வரர் கோயில் ராகு பரிகார ஸ்தலமாகும்.  போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோயில் கேது பரிகார ஸ்தலமாகும்.