ஒருநாள் போட்டியில் நான்கு சதம்: நியூசிலாந்து வீராங்கனை சாதனை!

ஆக்லாந்து,

ருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் நியூசிலாந்து வீராங்கனை  எமி சாட்டர்த்வைட்.

நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று  ஆக்லாந்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீராங்கனையான பெத் மூனே  100 ரன்கள் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 275 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.

அதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியினிர் மட்டையை பிடித்தனர்.

நியூசிலாந்து அணியினன் அதிரடி வீராங்கனையான  எமி சாட்டர்த்வைட் அவுட்டாகாமல் 102 ரன்கள் எடுத்தார். தொடர்ந்துஅவுட் ஆகாமல் 5 விக்கெட் இழப்புக்கு  49.1 ஓவரில் 276 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த சதன் காரணமாக  ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார் எமி சாட்டர்த்வைட்.

இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்,  தொடர்ச்சியாக அவுட்டாகாமல்,  137, 115, 123 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: four century in oneday match : New Zealand player achievement, ஒருநாள் போட்டியில் நான்கு சதம்: நியூசிலாந்து வீராங்கனை சாதனை!
-=-