பனி மூட்டம்: பீகாரில் ரெயில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி!

ஷிவான்,

பீகார் மாநிலத்தில் இன்று காலை ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பீகார் மாநிலம் ஷிவான் பகுதியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக ரெயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாது.

இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய பயணிகள் உடடினயாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4-பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.