லக்னோ அருகே நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

லக்னோ,

த்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள கார்பா பகுதியில் அமைந்துள்ள எஸ்எஸ்ஜே இன்டர்நேஷன் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

லக்னோ கார்பா பகுதியில்உ ள்ள எஸ்எஸ்ஜே இன்டர்நேஷனல் எனபபடும்  விராட் ஸ்டார் ஓட்டலில் இன்று அதிகால பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இதன் காரணமாக ஓட்டலின் சமையல் அறை சேதமடைந்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இந்த தீ விபத்தில் ஓட்டலில் பணியில் இருந்தவர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருந்தவர்கள் சிக்கினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 5 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையில், ஓட்டலின் சமையல் அறையில் உள்ள சிலிண்டரில்  காஸ் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என தெரிகிறது.  கட்டுப்படுத்த முடியாத அளவு ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..