தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் – கிணறு

வேலூர்,

வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தலைமை ஆசிரியை உள்பட இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர்களை அழைத்து வர சொன்னதால், மோனிஷா, தீபா, சங்கரி, ரேவதி என்ற நான்கு மாணவிகள் அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின்  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து  பள்ளியின் தலைமை ஆசிரியை ராமாமணி மற்றும் ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசாரும்  விசாரணை நடத்தி வருகின்றனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.