நான்கு இமாலய சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.

க்தாவன்

இமலயமலையில் ரக்தாவன் பகுதியில் உள்ள நான்கு சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இமயமலை உலகின் மிகப்பெரிய மலைத் தொடர் ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இந்த மலைத்தொடரில் இருந்து கங்கை, யமுனை உள்ளிட்ட பல ஜீவநதிகள் உற்பத்தி ஆகின்றன. இவற்றில் கங்கை உற்பத்தி ஆகும் கங்கோத்ரியின் அருகில் நான்கு சிகரங்கள் உள்ளன.

ரக்தாவன் பதிதியில் அமைந்துள்ள இந்த நான்கு சிகரங்களுக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிகரங்கள் கடலில் இருந்து 6557, 6566, 6100 மற்றும் 6100 மீட்டர்கள் உயரமானவை ஆகும். இந்த சிகரங்களுக்கு அடல் 1, அடல் 2, அடல் 3 மற்றும் அடல் 4 என பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்த தகவலை தெரிவித்த நேரு மலை ஏறும் பயிற்சி நிலைய தலைவர் அமித் பிஷி தனது குழுவினருடன் இந்த சிகரங்களில் ஏறி உள்ளார். அத்துடன் இந்த சிகரங்களில் இந்திய தேசியக் கொடியை அவர்கள் பறக்க விட்டுள்ளனர்.