மகாத்மா காந்தி குறித்து அவதூறு: இந்துத்துவா ஆர்வலர்கள் 4 பேர் கைது!

போபால்:

காத்மா காந்தி குறித்து  ஆட்சேபனைக்குரிய வகையில், அவதூறான கருத்துக்களை கொண்ட துண்டு பிரசுரம் விநியோகித்ததாக  இந்துத்துவா ஆர்வலர்கள் 4 பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பேசிய மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மக்களவை தொகுதி எம்.பி.யான பிரக்யா தாக்கூர், மகாத்மாகாந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, தேசபக்தர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரக்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு நாடாளுமன்ற அவைகள் முடக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் இந்துமகா சபையைச் சேர்ந்த ஆர்வலர்கள், மகாத்மா காந்தி குறித்து, ஆட்சேபகரமான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவர்கள் 4 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் வைத்திருந்த துண்டுபிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.

கார்ட்டூன் கேலரி