கோவை:

சூலூர் தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். நான்கு கால் பிராணி எடப்பாடி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவி மே 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  அந்த தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டிடிவி. தினகரன் பிரசாரம் செய்து வருகிறார்.

கொங்கு மண்டலமான அங்கு, டிடிவி தினகரனின் பேச்சு, கொங்கு மண்லத்தை சேர்ந்த எடப்பாடியை தாக்கியே உள்ளது. அப்போது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று எண்ணியே சசிகலா எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தார்… அவர் இப்படி துரோகம் செய்வார் என்று நினைத்திருந்தால், நானே முதல்வராகி இருப்பேன்… சசிகலா என்னையே முதல்வராக நியமித்து இருப்பார் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசியவர்,  தான் பதவிக்காக நாங்கள் ஆசைப்படுபவன் இல்லை என்றும்,  எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி போல எப்படி தவழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்று எல்லோக்கும் தெரியும். பதவியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என அவர்கள் செய்தது ராஜ தந்திரமா? அரசியலில் அடுத்தடுத்த பதவிகளை அடைய வேண்டும். முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் பதவி வெறி இருக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் பதவி வெறி காரணமாகத்தான் இப்போது இடைத்தேர்தல் வந்துள்ளது…  இதற்குக் காரணம் எடப்பாடி பழனிச்சாமி அன்கோ தான் என்றார்.

தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி என்று சாடியவர்,  துரோகத்திற்கு துணை போகமாட்டோம் என நிரூபிக்க சூலூர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதா யாருடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்றாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து விட்டார்கள்.  முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். 23-ந் தேதிக்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.