பெங்களூரு:

ர்நாடக மாநிலம், பெங்களூருவில் கர்நாடக அரசு தொடங்கியுள்ள மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’ல் கரப்பான் பூச்சி கிடந்தது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் போல மலிவுலை இந்திரா கேன்டீன் மாநிலஅரசால் தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 16ந்தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு இந்திரா கான்டீனை திறந்து வைத்து உணவருந்தினார்.

அதைத்தொடர்ந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கர்நாடக காங்கிரஸ் அரசு இந்திரா கேட்டீன்களை தொடங்கி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் காமாட்சி பாளையம் பகுதியில் உள்ள இந்திரா கான்டீனில்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மலிவுவிலை உணவில்  கரப்பான் பூச்சி கிடந்தது. இதைக்கண்ட உணவு சாப்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனே உணவக அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய காமாட்சிபாளைய போலீசார், அங்கள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது,  உணவில் கரப்பான் பூச்சிகளை சிலர் வீசிச்சென்றது தெரிய வந்தது. அதையடுத்து, இந்த கொடுர செயலில் ஈடுபட்ட   4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.