சென்னை:

லைநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் 4 புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாகவும், அதன் மூலம் நாளொன்றுக்கு 640 எம்எல்டி (MLD -million litres a day) அளவிலான தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னையில் நீர் நீர் மேலாண்மை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்,  சென்னை மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், அடுத்த ஆண்டுகளில் மேலும் பல கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளை திறக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை நகரத்தில் ஒரு நாளைக்கு 870 மில்லியன் லிட்டர் அளவி லான தண்ணீர் வழங்கும் வகையில் நிரந்தரமாக தண்ணீர் கிடைப்பதை  தமிழக அரசு உறுதி செய்யும். மேலும் 150 எம்எல்டி மற்றும் 400 எம்எல்டி அளவிலான நீர் உற்பத்தி செய்யும் இரண்டு ஆலைகளை நெம்மேலி மற்றும் பெருவில் நிர்மாணிக்க உள்ளதாகவும், மேலும் 45 எம்எல்டி அளவிலான இரண்டு ஆலைகளை நிறுவ திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.

இதற்காக  தலகனாச்சேரி குவாரி, நல்லம்பாக்கம் குவாரி மற்றும் 60 எம்.எல்.டி திறன் கொண்ட புலிபாக்கம் குவாரி போன்றவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மூலங்களிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக ஆய்வு நடந்து கொண்டிருப்பதாக வும், சென்னையில் 260 எம்.எல்.டி கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு தொழில்களுக்குற்சாலைகளுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.