வாஷிங்டன்:  அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெளியாட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. மேலும், வன்முறையாளர்களிடம் இருந்து இரண்டு பைப் குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்,  சமுக வலைதளங்களில் வன்முறையை தூண்டு வகையில் வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், முதல்கட்டமாக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். ஆனால், வன்முறையாளர்கள் அதற்கு பணியாமல் தொடர்ந்து முன்னேறியதால்,  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வன்முறை யாளர்களிடமிருந்து, இரண்டு பைப் குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றபோது, காவல்துறையினர் நடத்தி துப்பாக்கி சூட்டில் அந்த பெண் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாகவும், மைதானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. மேலும் வன்முறையாளர் களிடம் இருந்து  இரண்டு குழாய் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் வாஷிடன் மாகாண காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.