மன்னார்குடி வங்கி கொள்ளையில் 4 பேர் கைது

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கியில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ரூ. 6 லட்சம் கொள்ளைடியக்கப்பட்டது.

இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மணப்பாறை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளையில் பணியாற்றி வரும் ஊழியர் மரியம் செல்வம் ஆவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவர் தனது நண்பர்களான முத்துக்குமார், மீரான் மைதின், சுடலை மணி ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி மண்டல ஐஜி வரதராஜூ தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.