#MeToo புகார்கள்: 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மூலம் விசாரிக்கப்படும்! மத்திய அமைச்சர் மேனகா

டில்லி:

#MeToo புகார்கள் குறித்து  4 ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட குழு மூலம் விசாரிக்க உத்தர விடப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி உள்ளார்.

#Me Too என்ற ஹாஸ்டேக்கில் வெளியாகி வரும் பாலியல் புகார்கள் குறித்த பதிவுகள் நாடு முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் இதன் முலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மெரிக்காவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து, அம்பலப்படுத்தும் நோக்கில் சமூக வலைதளமான டிவிட்டரில் தொடங்கப்பட்டது   #மீ டூ  (நானும் பாதிக்கப்பட்டேன் /  #MeToo) எனப்படும் ஹேஸ்டேக்.

தற்போது இந்த மீ டூ  ஹேஸ்டேக் உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் சமீப நாட்களாக இந்த ஹேஸ்டேக்கில் பல அதிர்ச்சிகரமான தகவ்லகள் பதவிடப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் பாலிவுட் பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா கூறிய புகார் பிரபலமான நிலையில், தொடர்ந்து மத்திய அமைச்சர்  அக்பர்மீது புகார் பதிவாகி புயலை கிளப்பியது.

தொடர்ந்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலர்மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த ஹேஸ்டேக்கில், தமிழகத்தை சேர்ந்த பின்னணி பாடகி, பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவிட்டிருந்தார். இது தமிழக திரையுலகில் பீதியை கிளப்பிய நிலையில், தொடர்ந்து,  நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பாடகர் கார்த்திக் என நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே மத்திய வெளியுறத்துறை இணைஅமைச்சரான அக்பர் மீதான புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மோடிக்கு, அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்த நிலையில்,  மத்திய  அமைச்ச்ர ஸ்மிரிதி இரானியும் அக்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மீ டூவில் வெளியாகி உள்ள பாலியல் புகார்  தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.

#MeToo  ஹேஸ்டேக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நான் நம்பு கிறேன். அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது.  புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள்.  #MeToo பிரசார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.