ஐஎஸ்ஜேகே தலைவர் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் வேட்டை

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 4  பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கி  சண்டையில் காவலர் ஒருவரும், பொதுமக்கள் ஒருவரும்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இஸ்லாமியர்களுக்கே ( Islamic State Jammu and Kasmir) என்ற அமைப்பின் தலைவரும் ஒருவர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள  அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரீகுப்வாரா (Srigufwara) பகுதியில் பயங்கர வாதிகள்  பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை  பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த்னர்.  இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடி  தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது  பயக்ரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதனிடையே வன்முறை ஏற்படாமல் தடுக்க ஸ்ரீநகர், அனந்த்நாக், புல்வாமா ஆகிய 3 மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.