சென்னை:

குவைத்தில்  வீட்டு வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள், அங்கு கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தமிழகம் திரும்பி உள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்காக சென்றனர். மூன்று வெவ்வேறு அரபுக்களி வீடுகளில் அவர்கள் வீட்டு உதவியாக பணியமர்த்தப்பட்டனர்.  ஆனால், அங்கு வீட்டின் முதலாளிகளின் கைகளில் சிக்கி, உடல் ரீதியான துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் தனிமைச் சிறை போன்ற  சித்திரவதை களுக்கு ஆளான நிலையில் குவைத்தை விட்டு வெளியேறி மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

இவர்களில் எம்.அமுதா மற்றும் ஜி.ராஜேஸ்வரி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய நிலையில், வசந்தாமணி, முத்துலட்சுமி ஆகியோர் கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினர். முத்துலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.

குவைத்தல் தாங்கள் அனுபவித்த சித்ரவதை குறித்து கூறிய அமுதா, அங்கு  “நான் ஒரு சிறிய  காற்றோட்டம் இல்லாத அறையில்  இரண்டு நாட்கள் உணவு இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தேன், தனக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்று கண்ணீர் விட்டார்.

தனது கனவர் முடக்குவாதத்தால் முடங்கிப்போனதால், தான் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியவர், நாங்கள் 4 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்த ஏஜண்ட் மூலமே குவைத்தில் பணியில் சேர்ந்தோம் என்றும் தெரிவித்தார். ஆனால், தாங்கள் தற்போது நாடு திரும்ப தங்களின் நகைகளை விற்று செலவு செய்து வந்திருப்பதாக தெரிவித்தார்.

தங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ .40,000 சம்பளம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரண மாகவே குவைத்  சென்றதாகவும், தன்னைத் தொடர்ந்து வசந்தாவும் குவைத்து வந்தார்.  ஆனால் அவள் குவைத்தில் இறங்கியதிலிருந்து, அவள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. “நான் எனது முதலாளியின் தாயின் வீடு, அவரது சகோதரிகள் மற்றும் அவரது நண்பர்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.

காலை 6 மணிக்கு வேலையைத் தொடங்கி அதிகாலை 2 மணி வரை தொடருவேன். அவரது மனைவி நான் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுப்பதைக் கண்டால், அவள் என்னை அறைந்து விடுவாள்,  என்றார்.

காலை ஒரு வீடு, மதியம் ஒரு வீடு, இரவு ஒரு வீடு என்று மாறி, மாறி  வேலை செய்யவேண்டும். சரியாக உணவு தர மாட்டார்கள். மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு தருவார்கள். காலை, இரவு இரண்டு வேளையும் டீ தான் வழங்குவார்கள். இதுபற்றி கேட்டால் எங்களை அடித்து துன்புறுத்து வார்கள்.  உரிமையாளர்கள் வெளியே செல்லும்போது எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு செல்வார்கள். இதனால் எங்களால் யாருடனும் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று கேட்டால்  லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

இவ்வாறு கஷ்டப்படுத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்தோம் என்றும்,  நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினேன், தப்பினேன் என்றவர், ” குவைத்தில் மேலும் ஏழு பெண்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு உதவி தேவை என்றும் தெரிவித்து உள்ளார். இதுபோன்று ஏமாற்றும் முகவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்கள்.