கொல்கத்தா:
 
நான்கே வயதில்  ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது திருத்தணியைச் சேர்ந்த தமிழ்க் குழந்தை.

கலையன்பன்

தமிழகத்தின் திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் , தென்னரசு – சசிகலா தம்பதி. இவர்களது குழந்தை, டி.கலையன்பன். 4 வயதான இவர் கடந்த, மே 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை, மேற்கு வங்காளம் சித்தரஞ்சன் விளையாட்டு மைதானத்தில், ‘பஸ்ட் பீப்புல் ஏஸியன் ஒலிம்பிக் – 2017’ நடந்த, ஸ்கேட்டிங் போட்டியில் பங்கெடுத்தார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 வயதுக்குட்ப்பட்ட 12 குழந்தைகள் அகில இந்திய அளவில் நடந்த இந்த  ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டனர்.

‘ரோட் ரிங்க் டூ’ 500 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டார் கலையன்பன். இதில் சிறப்பாக விளையாடி  முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

தன்னைவிட மூத்த பிள்ளைகள் கலந்துகொண்ட போதும், சிறப்பாக விளையாடி நான்கே வயதில் தங்கப்பதக்கம் பெற்றார் கலையன்பன்.