குரோர்பதி நிகழ்ச்சியில் மகளிர் ராஜ்ஜியம்.. கோடியை அள்ளிய நால்வரும் பெண்கள்…

 

தொலைக்காட்சியில் இந்தி ’சூப்பர்ஸ்டார்’ அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 12 -வது சீசன் இப்போது நடந்து வருகிறது.

ஏற்கனவே அனுபா தாஸ், நசியா நாசிம், மோகிதா சர்மா ஆகிய மூன்று பெண்கள் சரியான விடையை சொல்லி தலா ஒரு கோடி ரூபாயை தட்டிச்சென்றுள்ளனர்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியிலும் மும்பையை சேர்ந்த பெண் டாக்டர் நேகா ஷா என்பவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.

ஒரு கோடி ரூபாய் வென்றவர்கள், அடுத்த கேள்விக்கு, சரியான விடை சொன்னால் 7 கோடி ரூபாய் கிடைக்கும்.

தப்பான விடை சொன்னால் ஒரு கோடியும் பறி போய் விடும்.

இதனால் ஒரு கோடி ரூபாய் வென்ற நான்கு பெண்களுமே 7 கோடி ரூபாய்க்கான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

இப்போது ஒரு கோடி வென்றுள்ள நேகா, அமிதாப்பச்சனின் தீவிர ரசிகை ஆவார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக குரோர்பதியை நிகழ்ச்சியை பார்த்து வருகிறாராம்.

– பா. பாரதி