ஈரானுக்கு அதிகாரிகள் செல்ல தடை விதித்த பிரான்ஸ்

பாரிஸ்

ரசு அதிகாரிகள் ஈரானுக்கு செல்ல பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டதை ஒட்டி இரு நாடுகளுக்கிடையே பகை ஏற்பட்டுள்ளது.   ஈரான் நாட்டுக்கு கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.    மேலும் ஈரானுடனான வர்த்தக உறவை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா உத்தரவிட்டது.

இதனால் ஈரான் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.   இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் உண்டாக பிரான்ஸ்  உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.   ஆயினும் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.  மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருளாதார தடைகள் விதிக்கப் போவதாகவும் மிரட்டி உள்ளது.

பாரிஸ் நகரில் ஈரானுக்கு எதிரான கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது.  இதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கலந்துக் கொண்டார்.  இந்த கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது முறியடிக்கப் பட்டுள்ளது.   இதனால் பிரான்ஸில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம், “பிரான்ஸ் நாட்டு அரசு அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் ஈரானுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   மிக மிக அவசியமான காரணம் இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு செல்ல முடியும்.    பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.” என அறிவித்துள்ளது.