விளம்பரங்களில் மிகவும் ஒல்லியான மாடலிங் பெண்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்கும் சட்டம் பிரான்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பர உள்ளிட்ட அனைத்து மாடலிங்காக நடிப்பதற்கு பெண்கள் தங்களது உடல் எடையை போட்டி போட்டுக் கொண்டு குறைக்கும் பழக்கம் உள்ளது. ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே மாடலிங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதனால் அப்பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் ம £டலிங் பெண்களுக்கு உடற் தகுதி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. தற்போது பிரான்சில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

‘‘மாடலிங் பெண்கள் முறையான உடற் தகுதி குறித்து டாக்டர்களின் சான்றிதழ் பெற வேண்டும். அவர்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாப்பாடு குறைத்தல், அழகுக்கான அணுக முடியாத லட்சியங்கள் போன்றவற்றை எதிர்க்கும் நோக்கத்தோடு இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்தும் வரும் அக்டோபர் முதல் தெரிவிக்க வேண்டும். மாடலிங் பெண்களின் தோற்றம் மோசடியாக புகைப்படங்களில் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள இச்சட்ட மசோதாவில் குறைந்தபட்ச உடற்தகுதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள. இதை எதிர்த்து பிரான்ஸ் மாடலிங் ஏஜென்சிகள் போராட்டம் நடத்தின.

எனினும் கடந்த 2015ம் ஆண்டில் எம்.பி.க்களின் இறுதி அறிக்கையில் ‘‘மாடலிங் என்பதை முடிவு செய்ய உடல் எடை, வயது, உடல் வடிவம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொண்டு டாக்டர்கள் முடிவு செய்யலாம்’’ என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 7 ஆயிரம் முதல் 82 ஆயிரம் யுரோஸ் வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு 6 மாத கால சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

‘‘நெறிமுறையற்ற மற்றும் நம்பதகாத வகையில் இளைஞர்களின் தோற்றத்தை வெளிப்ப டுத்துவது சுய உடல் குறைப்பு மற்றும் சுய மரியாதையை இழக்கச் செய்யும். இவை இரண் டும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று பிரான்ஸ் சமூக நலம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மாரிசோல் துவரைன் தெரிவித்துள்ளார்.

எடை குறைவான மாடலிங்குகளுக்கு தடை விதிப்பதில் பிரான்ஸ் முதல் நாடல்ல. ஏற்கனனே இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இது அமலில் உள்ளது. பிரான்சில் பசியின்மையால் 30 முதல் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.