பிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் 63 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஷிவா தபா.

பிரான்சின் லவுன்ஸ் ஹாம்ரவுய்யுடன் 1-2 என்ற புள்ளி கணக்கில் தோற்ற இவருக்கு வெண்கலம் கிடைத்தது. அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவில், பிரான்சின் பெனிக் ஜார்ஜை வென்ற இந்தியாவின் கவிந்தர் சிங் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மேலும், 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்ஜித், அமெரிக்காவின் ஷெராடு புல்கமை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். 52 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்காவின் கிறிஸ்டோபரை வீழ்த்திய இந்தியாவின் அமித் பங்கல், இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.