பிரான்ஸ்: பேஸ்புக் டேட்டிங்! கற்பை பறிகொடுத்த பெண்!! 3 பேர் கைது!

1tower1

பிரான்ஸ்:

பேஸ்புக் பழக்கத்தால் தனது கற்பை பறிகொடுத்த பெண், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

சமுக வளைதளங்களில்  முகமறியாத நபர்களுடன் சாட் செய்வது பெண்களுக்கு விபரீதமாக முடியலாம் என்பதற்கு உதாரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரு சம்பவம் நடத்திருக்கிறது.

ஒரு பெண்ணிடம் சாட் செய்த ஒரு நபர் அந்தப் பெண்ணிடம் நல்லவன் போல நடித்து அப்பெண்ணை டேட்டிங் வரவழைத்து பின்னர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்திருக்கிறான்.

உலகப்புகழ் பெற்ற  ஈஃபில் கோபுரம் அருகேயுள்ள சாம்ப்-டி-மார்ஸ் என்ற பூங்காவில்  அந்த பெண் தனது ஆண் நண்பர் மற்றும் அவரது நண்பர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார்..

இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூவரும் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதது.