ஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு பதவியேற்ற பிறகு திருத்தி புதிய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,  பிரான்ஸ் அரசிடம் இருந்து அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனம் ரூ.11,24,99,03,558 (தோராயமாக 1125 கோடி) வரி விலக்கு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ரஃபேல் போர் விமான வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ள உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் பவுசிசோ (Julien Bouissou)  என்பவர் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ரஃபேல்  தொடர்பாக நடத்திய புலனாய்வு விசாரணை யில் இந்த விவரங்கள்  தெரிய வந்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார். மேலும்,  கடந்த 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுக்குள் அனில் அம்பானி நிறுவனத்துக்கு 60 மில்லியன் யூரோல் அளவுக்கு வரி விலக்க  வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் முதல்கட்டமாக 284 கோடி ரூபாயை லஞ்ச தொகையை கமிஷனாக பெற்றிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மோடி, டசால்ட் நிறுவனத்திடம்  இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கு வதற்கான தனது திட்டங்களை அறிவித்த பிறகு, சில மாதங்களுக்குள், அனில் அம்பானியின் பிரெஞ்சு நிறுவனத்திற்கு 143,7 மில்லியன் யூரோக்கள் வரி விதிப்புகளை பிரெஞ்சு அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த தகவலை செய்தியாளர் ஒருவர் பகிரங்கப்படுத்தி உள்ளார். இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.