பாரிஸ்

பிரான்ஸ் நாட்டில் குடியேறி ஒரு குழந்தையை காப்பாற்றி  சாகசம் புரிந்த மலி நாட்டை சேர்ந்த கசாமாவுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து நான்காம் மாடியில் ஒரு குழந்தை தொத்திக் கொண்டிருந்தது.   அதக் கண்ட கசாமா என்னும் மலி நாட்டை சேர்ந்த வாலிபர் பால்கனிக்கு பால்கனி ஸ்பைடர்மேன் போல தாவி அந்தக் குழந்தையை காப்பாற்றினார்.

இதை ஒட்டி பாரிஸ் நகர மேயர் கசாமாவுக்கு விருந்து அளித்து பாராட்டினார்.    அத்துடன் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரானின் அழைப்பையும் அவருக்கு அளித்தார்.    அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட கசாமா பிரான்ஸ் அதிபரை சந்தித்தார்.

பிரான்ஸ் அதிபர் கசாமாவை பாராட்டினார்.  அவருடைய தீரச்செயலுக்கு பரிசாக பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமையும் அரசில் தீயணைப்புத் துறையில் பணியும் அளித்துள்ளார்.