ம், எலுமிச்சம் பழம் உள்ப பூஜை புனஷ்காரத்துடன், முதல் ரஃபேல் போர் விமானத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தததில் முறைகேடு உள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பான வழக்கும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட  ஒப்பந்தத்தின்படி முதல் போர் விமானம்,  பிரான்ஸ் சென்றிருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக 3 நாள் நிகழ்ச்சியாக பிரான்ஸ் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர், இன்று  பிரான்ஸில் உள்ள துறைமுக நகரான போர்டாக்ஸில் நடந்த ஆயுத பூஜை விழாவில் பங்கேற்றார். அவரிடம் டசால்ட் நிறுவனம் முதல் விமானத்தை ஒப்படைத்தது.

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர் களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தியில் எழுதினார் .

இன்று இந்தியாவின் விமானப்படை நாள் கொண்டாடப்படும் நிலையில், விஜயதசமி நாளான இன்று முதல் ரஃபேல் விமானம்  இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது/

இதையடுத்து அந்த விமானத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்தார்.