டில்லி,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக 460 வங்கிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையகம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பள்ளி மாணவர்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,   ‘ஊழல் இல்லாத இந்தியா’ என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஆண்டு ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள  70,000 பஞ்சாயத்துகள், 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த ஆண்டு முதல்  பள்ளி, கல்லூரிகளிலும் ஊழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மத்தியில் லஞ்ச, ஊழலுக்கு எதிரான கருத்துக்களை ஆழமாகப் பதிக்க வேண்டியது கட்டாயம்.  அதன்படி,  வரும் 30-ம் தேதி டில்லியில்  நடைபெறும் ஊழல் விழிப்புணர்வு வார தொடக்க நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று சிறப்புரை ஆற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பின்போது செல்லாத நோட்டுக்கள் மற்றும் புதிய நோட்டுகளை மாற்றிக்கொடுத்தபோது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு தனியார், பொதுத்துறை வங்கிப் பணியாளர்கள் முதல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வரையிலான 460 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டதற்காக இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.