’நரகாசூரன் ’பட இயக்குனர் பெயரில் மோசடி.. நரகத்துக்குத்தான் செல்வார்கள் என சாபம்..

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி யவர் கார்த்திக் நரேன். இதையடுத்து நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா நடித்துள் ளனர். இப்படம் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருக்கிறது, இதையடுத்து அருண் விஜய், பிரசன்னா நடித்த மாஃபியா என்ற படத்தை இயக்கினார். கார்த்திக்நரேன்.


இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அதில் ’என் பெயரைச்சொல்லி செல்போன் எண்ணும் கொடுத்து சிலர் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்வதாக எனக்கு தகவல் வந்தது. அப்படி ஏதாவது நம்பர் வந்தால் அதை பிளாக் செய்துவிடுங்கள். இப்படி மோசடி செய்பவர்கள் நரகத்துக்குதான் செல்வார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.