Random image

மந்திரி மகள் உள்பட 400 பேரை ஏமாற்றி பணம் பறித்த பலே கில்லாடி கைது: ஐதராபாத் காவல்துறை நடவடிக்கை

காக்கிநாடா:

மந்திரி மகள் உள்பட சுமார் 400 பேரை ஏமாற்றி பணம் பறித்த பலே கில்லாடி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பெயர் வம்சி கிருஷ்ணா . ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் ஐதராபாத் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.4 கோடிக்கும் மேல்பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ஆந்திர இளைஞர்

ஏற்கனவே கைது செய்யப்பட்ட வம்சி கிருஷ்ணா, பின்னர் தலைமறைவானார். இந்த நிலையில், காக்கிநாடா ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவரான  வம்சி கிருஷ்ணா பொறியியல் படிப்பை பாதியில் முடித்துவிட்டு, சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள்,  பணக்கார பெண்களுக்கு வலைவீசி அவர்களிம் ஆசை வார்த்தை பேசியும், காதல் செய்வதாக கூறியும் வசியப்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறும் வம்சி,  சமூக வலைதளம் பழகும் பணக்கார பெண்களை கண்டு, அவர்களிடம்  வீடியோ கால் மூலம்  பேசி தன்னுடைய வியாபாரத்துக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகையை பெற்றுள்ளார்.

அவர் மீது ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 6 மாதங்களில் 25 சிம்கார்டுகளை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் சமுபத்தில் மருத்துவ மாணவி ஒருவரிடம் பணம் வாங்க வந்தபோது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.