பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை:

மிழக  பள்ளி மாணவ – மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார் முதல்வர் வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முடங்கி கிடந்த இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தொடரின்போது, 11 லட்சத்து 78 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி 16 மாணவ – மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிள்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற பெயரிலான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வைக் ஏற்படுத்தும் வகையில்  விளமபரத் தூதர்களாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விவேக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல,  சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும்  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. இதனை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.