சென்னை:

லகம் முழுவதும் பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து போராடுவது என்பது குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,  உலக புற்று நோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மார்பக புற்றுநோய் காரணமாக மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் செயற்கை மார்பகத்தை உருவாக்கும் வகையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய காஸ்மெடிக் சர்ஜிரி பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

நேற்று நடைபெற்ற ஸ்டான்லி மருத்துவமனையில் புற்றுநோய் தொடர்பான நிகழ்ச்சியில் பங்குபெற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்க இலவச காஸ்மெடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும்  ஏழை பெண்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக  இந்த காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், இதற்கு தேவையான நிதி உதவி, சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும் என்றும் என்றார்.  மேலும், இந்த திட்டம் தமிழக அரசின் இலவச மருத்துவ திட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் மூலமும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

விழாவில் பங்கேற்று பேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் வி.ரமாதேவி பேசும்போது,  கடந்த சில மாதங்களில் நிறைய பெண்கள் மார்பக கேன்சர் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களின் நோயை குணப்படுத்தியும், ஒருசிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவர்களது மார்பகத்தை அகற்றியும் வருகிறோம். இந்நிலையில், அவர்களுக்கு  செயற்கை முறையில், காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மூலம் அழகு சரி செய்யப்படும் எனகூறினார்.