இன்று நள்ளிரவு முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் உள்ள பக்தர்களுக்கு மட்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இந் நிலையில் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளதாவது:

ஏழுமலையானை தரிசிக்க வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும். பூதேவி காம்பளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும். இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் 4ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.