நடிகர் சித்தார்த் வெளியிட்ட வீடியோ.. தனியார் பள்ளியில் இலவச கல்வி..

திரைப்பட நடிகர் சித்தார்த் அரசியல், சமூகம் பற்றி அடிக்கடி தனது இணைய தள பக்கத்தில் துணிச்சலாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இலவச கல்வி பற்றி முக்கிய தகவல் வெளியிட் டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


நாம் எல்லோருமே நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் நல்ல எதிர்காலம் அமைய தரமான கல்வி முக்கியம் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வாய்ப்பிருக்கி றது. ரைட்ஸ் டு எஜுகேஷன் ஆக்ட் அதாவது இலவச கல்வி சட்டம். இந்த சட்டம் மூலமாக தனியார் பள்ளியில் உங்க குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியும்.
உங்கள் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், உங்க வீட்டில் மூன்றிலிருந்து நான்கு வயதுக்குள் குழந்தைகள் இருந்தால் www.ilavasakalvi.in என்ற மெயிலுக்கு தகவல் தாருங்கள், அல்லது 8144224444 என்ற எண்ணுக்கு மிஸ்ட்டு கால் கொடுங்கள். இந்த விஷயத் தில் இதற்கு மேல் நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.
பூமி என்கிற ஒரு என் ஜி ஓ இருக்கிறது. அதில் என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க உங்கள் கூடவே இருந்து உதவுவார்கள். இதை இன்னும் நிறைய பேருக்கு ஷேர் செய்யுங்கள்.
இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.