கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: எடப்பாடி தொடக்கம்

சென்னை:

கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இலவச உணவு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் நடைபெற்ற விழாவில், கலந்துகொண்டு, கட்டிட தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜனவரி (2019)  மாதம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி,  கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட  இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த உணவுக்கான கட்டிட நல வாரியம் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.  இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் சென்னை மாநகராட்சிக்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியம் இடையே போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,   கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அவருடன் அமைச்சர்கள், மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜன் ஐபிஎஸ், பதர் சயித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: amma canteens soon, Construction workers, Free food scheme, Inagurated, to get free food, அம்மா உணவகம், இலவச உணவு!, எடப்பாடி பழனிச்சாமி, கட்டிட தொழிலாளர்கள்
-=-