ஊரடங்கு முடியும் வரை சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்… அமைச்சர் வேலுமணி

--
சென்னை:
ரடங்கு முடியும் வரை சென்னை முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு  மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் 7ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு  நிறுத்தப்பட்டு பழைய முறைப்படி, உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்றும், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும்  மே 31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.