டில்லி,
கிராமப்புறங்களிலும் இலவசமாக இணைய வசதி செய்து கொடுக்க மத்திய அரசுக்கு டிராய் அமைப்பு  பரிந்துரை செய்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய அரசும் மின்னணு பண வரித்தனை செய்யுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், அதற்கான இணையதள வசதி இன்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் கிடையாது.
ஆகவே, மின்னணு பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் பொருட்டு கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இலவச இணைய வசதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு ட்ராய் வலியுறுத்தியுள்ளது.
தற்போது மத்திய அரசு  ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக பரிசுத் திட்டங்களை அறிவித்து உள்ளது. மக்கள் மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய்,

மின்னணு பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இணைய இணைப்பினை இலவசமாக வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக மாதம் ஒன்றுக்கு 100 மெகாபைட்ஸ் (MB) என்ற அளவிலான இணைய வசதியை இலவசமாக அளிக்கலாம் என்றும் ட்ராயின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.