டில்லி:

நோய்களை கண்டறிய ரத்தம், சளி, சிறுநீர் உள்ளிட்ட பல மாதிரிகளை கொண்டு பரிசோதனை செய்யப்ப்டடு வருகிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளில் கிடைத்தாலும், தனியார் ஆய்வுக் கூடங்களும் அதிகளவில் மேற்கொள்கின்றன. இந்நிலையில் நோய் கண்டறியும் பரிசோதனைகளை அத்தியாவசியமாக்க மத்திய சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இதற்கென்று பிரத்யே பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அடிப்படை மற்றும் உயிர் காக்கும் பரிசோதனைகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய நோய் அறிதல் பட்டியலை அரசு விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார் க்கப்படுகிறது.

மேலும், தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்களில் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பரிசோதனைகள் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக தேசிய அளவிலான முதல் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் இந்திய மருத்துவ குழு முன்னாள் இயக்குனர் ஜெனரல் சவுமியா சாமிநாதன் உள்பட சுமார் 50 வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மருத்துவ குழு விஞ்ஞாணி காமினி வாலியா கூறுகையில், ‘‘தனியார் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கு கட்டணம் வரையறை செய்யப்படவுள்ளது. இந்தியா தற்போது தொற்று நோய்களில் இருந்து தொற்று அல்லாத தொடர்பு நோய்களை நோக்கி மாறி கொண்டிருக்கிறது. அதனால் இந்த பட்டியலில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இரும்பு குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு கண்டுபிடித்தல் போன்ற பரிசோதனைகள் இடம்பெறும்.

இந்தியாவின் இந்த பட்டியல் உலக சுகாதார மைய குழுவினரின் தேர்வு அடிப்படையில் இருக்கும். இதில் அத்தியாவசிய மருந்துகளின் பரிந்துரையில் நோய் அறிதல் பரிசோதனைகளும் அத்தியாவசதியமாக்கப்படும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அத்தியாவசிய பரிசோதனைளை மேற்கொண்டு அதற்கான மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறதா? என்பதை இதற்கான பணியாற்றும் குழுவினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உலக சுகாதார மையத்தின் அத்தியாவசிய பரிசோதனை பட்டியலின் நோக்கம்த்தில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா, ஈரல் அழற்சிபறை (ஹெபடைடிஸ்) போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

1996ம் ஆண்டில் உலக சுகாதார மையத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தியா தனது முதலாவது அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை கொண்டு வந்தது. இதில் 279 மருந்துகள் இடம்பெற்றது. இது 2003ல் 354ஆக உயர்ந்தது. 2011ல் 348, 2015ல் 376 மருந்துகள் இருந்தது. 2016ல் கரோனரி ஸ்டென்டஸ்கள் சேர்க்கப்பட் டுள்ளது.