தீபாவளி முதல் அறிமுகம்: மதுரை மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு!

மதுரை:

துரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த இலவச லட்சு வழங்கும் திட்டம்  தீபாவளி அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தீபாவளி முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம்  ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லட்டு தயாரிப்பதற்காக செகந்திரபாத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், நவீன இயந்திரத்தை கோயில் நிர்வாகம் வாங்கியுள்ளது. அந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லட்டுகள் மட்டும் தயாரிக்க முடிகிறது. இதன் காரணமாக,  முதல் கட்டமாக வரும் தீபாவளி முதல் தினசரி 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Devotees, Diwali, Free Laddu Prasadam, Laddu Prasadam, Madhurai Meenakshi Amman, Madurai Meenakshi Amman, Madurai Meenakshi Amman Temple
-=-