Random image

இந்த ஆண்டு இறுதிக்குள் இலவச சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை:

ந்த ஆண்டு இறுதிக்குள்  பிளஸ்1 மற்றும் பிளஸ்2 படிக்கும் 1மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை ஒவ்வொரு நாளும்  வெளியிட்டு வரும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்றும், கல்விச்சாலைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்படும் என்றும் கூறி வருகிறார்.

இன்று  திருத்தணி அடுத்த நெமிலி அரசு பள்ளிக்கு கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ‘ டிசம்பர் மாதத்திற்குள் 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதி வண்டி வழங்கப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் மாணவர்களுக்கு உருவாக்கி தரப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும். அரசு பள்ளியில் ஆசிரியர் இல்லை என்ற குறையை போக்குவதற்காக பள்ளியில் ரூ. 7200 சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசியர்களை நியமித்துக்கொள்ளலாம்’’ என்றும் அதிரடியாக கூறி உள்ளார்.

ஆனால், அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதாக கூறும், அமைச்சர்தான் புற்றீசல்கள் போல  தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் அனுமதி வழங்கி வருகிறார். இவர் கடந்த வாரம் (ஆகஸ்டு 30ந்தேதி)  கும்ப கோணத்தில்  அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்ட போது, . 11,12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு அடுத்த மாத (செப்டம்பர்)  இறுதிக்குள் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். அதுபோல, அடுத்த வார இறுதிக்குள்  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு  இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஒரு வாரத்திற்குள் தனது நிலையை மாற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.