மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை:

மிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்  அடுத்த வாரமும், விலையில்லா மடிக்கணினி அடுத்த மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டு வரும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,  அடுத்த வார இறுதியில் விலையில்லாத சைக்கிள்கள் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

இன்று  கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஆசிரியர்களின்  வருகை பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியை சுற்றிப்பார்த்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருவதாக கூறினார். இந்த கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளின்  சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கல்வி ஆண்டில் மாண வர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு. 11,12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். அதுபோல, அடுத்த வார இறுதிக்குள்  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு  இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று கூறினார்.