மதுரை:
மிழத்தில் உள்ள அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக் கவசம்  வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது.  கண்டறிய அதிக அளவிலான  சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வேறு எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், அவசியத்திற்காக வெளியேப் போகும்போது,  கண்டிப்பாக சமூக விலகலுடன்  முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்குவதாக தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி நபர் ஒன்றுக்கு 2 முக்கவசம் என, குடும்ப அட்டையில் எத்தனை போர் உள்ளார்களோ, அவர்களின் எண்ணிக்கைக்கு  தகுந்த அளவில் இலவச முகக்கவசம் வழங்கும் பணி தொடங்க உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்வை இன்று  தொடங்கி வைக்கிறார். அதையடுத்து, ஒரு சில நாட்களில் ரேசன் கடைகளில் பொதுமக்கள் இலவசமாக முகக்கவசங்கள் பெற்றுக்கொள்ளலாம்.