நடமாடும் வேன் மூலம் சென்னை மக்களுக்கு இலவச முகக்கவசம்… அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி, நடமாடும் வேன் மூலம் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

சென்னையில் மக்கள் நெருக்கம் காரணமாக, கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் தீவிரமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த முக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி முக்கியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் அதை சரியான முறையில் கடைபிடிக்க மறுப்பதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இதையடுத்து, சென்னை நகர் முழுவதும் நடமாடும் வேனில் சென்று இலவச முகக்கவசம் வழங்க அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த திட்டத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஓட்டேரியில்  நடைபெற்ற நிகர்ச்சியில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி துவக்கி வைத்தார்.

இன்று திரு.வி.க. நகர் தொகுதியில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.  நாளை வில்லிவாக்கம் தொகுதியிலும், நாளை மறுநாள் கொளத்தூர் தொகுதியிலும், அதற்கு அடுத்த நாள் ராயபுரம் தொகுதியிலும் முகக்கவசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.