டில்லி:

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,  இன்று முதல், தங்களது விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் அறிவித்து உள்ளது.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், மகளிரை கவுரவிக்கும் வகை யில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதேபோல, பன்னாட்டு நிறுவனங்களும் பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

‘இந்தியாவில்  முதல் முறையாக அரியானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிர்வாகம், மகளிர் தினத்திலிருந்து தனது விமானங்களில் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதில் பிளாஸ்டிக் இல்லை, நச்சு வாயுக்கள் இல்லை. விமானத்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பயணத்தை இலகுவாக மேற்கொள்ள இந்த நடைமுறை வரும் மார்ச் 8ம் தேதி முதல் நடைமுறைப்படுத் தப்படும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  விஸ்தாரா நிறுவன அதிகாரி தீபா சத்தா,  “சிறிய செயல்கள், பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கேற்ப, வாடிக்கையாளருக்கு நாப்கின் வழங்குவது அர்த்தமுள்ள தொடக்கமாக இருக்கும். பெண்களின் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றைக் கொடுக்கும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில், குறிப்பாக ஒரு பெண்ணாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது, பல பயணிகளுக்கு உதவும்” என்று கூறினார்.