சென்னை:

அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ இலவச பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள  412 மையங்களில், பயிற்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு  நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், நீட் , ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவசமாக கோச்சிங் கொடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவ மாணவி களுக்கான  இலவச பயிற்சி வகுப்புகள்  இன்று தொடங்கியது.

இதுவரை தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, பயிற்சி பெற்ற அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாரம் 5 நாட்கள் வகுப்புகள் தொடங்கும் என்றும்,  காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரையிலும், பிற்பகலில், 1.10 மணி முதல் 4.20 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.